எனது நீண்டநாள் கனவு நனவானது: NC22 படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்து வெங்கட்பிரபு!
Send us your feedback to audioarticles@vaarta.com
எனது நீண்ட நாள் கனவு நனவானது என நாக சைதன்யாவின் 22வது படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
நாகசைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் உருவாகயிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. வெங்கட்பிரபுவின் 11 வது படமான இந்த படத்தின் ஒருசில அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முதல்கட்டமாக நாக சைதன்யா ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக வந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர்களாக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பணிபுரிய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனது பெரியப்பா இசைஞானி இளையராஜாவுடன் பணிபுரிய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகி இருப்பதாகவும் முதல் முறையாக இளையராஜா மற்றும் என்னுடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
வெங்கட்பிரபுவின் பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும் தற்போது முதல் முறையாக இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ திரைப்படத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
A dream come true moment for me!! Joining hands with my uncle (periyappa) #isaignani @ilaiyaraaja for the first time along with my brother @thisisysr for #NC22 #VP11 pic.twitter.com/OVzZS03T8B
— venkat prabhu (@vp_offl) June 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments