கீர்த்திசுரேஷூக்கு விஷால் தரும் பிறந்த நாள் பரிசு

  • IndiaGlitz, [Friday,July 13 2018]

விஷால் நடிப்பில் உருவான 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினங்களில் வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி கீர்த்திசுரேஷின் பிறந்த நாளுக்கும், இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆம், அக்டோபர் 17ஆம் தேதி தான் கீர்த்திசுரேஷின் பிறந்த நாள். அவருடைய பிறந்த நாளுக்கு அடுத்த நாள் தான் அவர் நடித்த 'சண்டக்கோழி 2' திரைப்படம் வெளியாகவுள்ளது. எனவே இந்த ஆண்டு கீர்த்திசுரேஷின் பிறந்த நாள் டபுள் விருந்தாக கொண்டாடப்படவுள்ளது மட்டுமின்றி கீர்த்திசுரேஷுக்கு விஷால் தரும் பிறந்த நாள் பரிசாகவும் இந்த படம் ரிலீஸ் உள்ளது.

விஷால், வரலட்சுமி, கீர்த்திசுரேஷ், ராஜ்கிரண், சூரி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாலும், விஷால்-வரலட்சுமி இணைந்து நடித்த படம் என்பதாலும், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது