பிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் சார்லி. இவர் சமீபத்தில் விவேக்குடன் நடித்த வெள்ளைப்பூக்கள் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சார்லி ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் செய்த ஆய்வுக்காக அவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது. டாக்டர் பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைகழகத்தில் நடிகர் சார்லி எம்.பில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com