'விஜய் அடுத்தபட இயக்குனர் இவர் தானா? மறைமுகமாக உறுதி செய்ததால் ரசிகர்கள் குஷி..!
- IndiaGlitz, [Thursday,April 20 2023]
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில் அநேகமாக மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே அவர் என்டிஆர் பாலகிருஷ்ணனின் ’வீரசிம்ஹ ரெட்டி’ என்ற சூப்பர் ஹிட் படத்தை சமீபத்தில் இயக்கியிருந்த நிலையில் விஜய்யை நேரில் சந்தித்து கதை கூறியதாகவும் அதற்கு விஜய் ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் கோபிசந்த், விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திடீரென ஃபாலோ செய்துள்ளார். இதன்மூலம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான் என்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படம் மாஸ் காட்சிகளுடன் கூடிய படமாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.