சென்னை அருகே ஐ.டி ஊழியர் மர்ம மரணம்
- IndiaGlitz, [Wednesday,May 31 2017]
சென்னை அருகே உள்ள மகேந்திரசிட்டியில் உள்ள முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மரணம் அடைந்த ஊழியரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்த ஆரம்பகட்ட விசாரணையில் மரணம் அடைந்த ஊழியர் பெயர் இளையராஜா என்றும், அவர் இறந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காஞ்சிபுரம் போலீசார், இளையராஜாவின் மரணம் தற்கொலையா, அல்லது கொலையா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.