கடற்கரையில் ஒரு நாள்… நடிகை சாயிஷா பதிவிட்ட மாஸான புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா பின்புலம் கொண்ட நடிகை சாயிஷா தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது திருமணத்திற்குப் பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகச் செயல்பட்டுவரும் இவர் ஒரு சுவாரசியமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளம் வயதிலேயே சினிமா துறைக்கு வந்துவிட்ட நடிகை சாயிஷா முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட், கன்னடம், தமிழ் மொழி சினிமாக்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் தமிழில் இவர் “வனமகன்“, “கடைக்குட்டி சிங்கம்“, “காப்பான்“, “கஜினிகாந்த்“, “டெடி“ போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்குப் பிறகும் கணவருடன் இணைந்து “டெடி“ திரைப்படத்தில் நடித்திருந்த இவர் குழந்தைப் பெற்ற பிறகு தற்போது மீண்டும் தனது நடனப் பயிற்சியை துவங்கியுள்ளார். அற்புதமான நடன ஆற்றல் கொண்ட இவரது முயற்சியை ரசிகர்கள் வரவேற்ற நிலையில் ஒருபோதும் எனது நடனத்தை மட்டும் கைவிடமாட்டேன் எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அழகான குடும்பம், அழகான குழந்தை என பிசியாக வாழ்ந்துவரும் நடிகை சாயிஷா ஒரு நாள் முழுவதும் கடற்கரையில் நேரத்தை செலவிட்ட நிலையில் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments