தமிழ்நாட்டுகே ஒரு அபாய போர்டு வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அந்த கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர முயற்சியில் உள்ளார். மேலும் தனது கட்சியில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கமல் ஆவேசமாக கூறியதாவது:

வணக்கம். சில ரோட்டில் மின்சாரம் அபாயம் என்ற போர்டு இருக்கும். அதுமாதிரி தமிழ்நாட்டுகே ஒரு போர்டு வைக்க வேண்டும் என்றால் என்ன வாசகம் எழுதலாம் தெரியுமா? பார்வையாளர்கள் அபாயம் என்ற போர்டுதா. நம் நாட்டில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் தான் அதிகம்.

எது எப்படிபோனால் என்ன நாம் பார்த்து கொண்டே இருக்க பழகிவிட்டோம். பழகிவிட்டோம் என்றால் நான் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். நானும் அப்படித்தான் இருந்தேன். முடியல. பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம். என்று அந்த வீடியோவில் கமல் பேசியுள்ளார்.

 

Let’s rise to the occasion! #MakkalNeedhiMaiam #maiam #JoinMNM https://t.co/USv1tbAHCN

— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2018

More News

நடிகை ஸ்ரீதேவி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ஸ்ரீதேவி துபாயில் குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 54

இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தேன்: கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய மென்பொறியாளர் லாவண்யா

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மென்பொறியாளர் லாவண்யா, பணியை முடித்துவிட்டு இரவில் சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்தபோது மூன்று கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.

நான் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன்: சன்னிலியோன் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பாலிவுட் திரைப்படங்களிலும் தமிழில் 'வீரமாதேவி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அருவி படத்தின் பட்ஜெட்டே ரூ.2 கோடிதான், ஆனால் விபிஎஃப்-க்கு? எஸ்.ஆர்.பிரபு வேதனை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் எதனால்?

பிரதமர் வருகையை புறக்கணிப்பதாக நடிகர்-எம்.எல்.ஏ அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தமிழகம் வருகை தருகிறார் என்பதும், இன்று நடைபெறும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார் என்பதும் தெரிந்ததே.