தோல்வி அடைந்த பிரேசில் அணி நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷியா வீரரின் மகன்: நெகிழ்ச்சி வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் மிகவும் தீவிரமாக விளையாடினர்.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட வாய்ப்பு கிடைத்தும் கோல் எதுவும் போடவில்லை என்ற நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் பிரேசில் அணியின் நெய்மர் மிக அபாரமாக 106 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனை அடுத்து தடுப்பு ஆட்டத்தில் மட்டும் பிரேசில் அணி வீரர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் ஆட்டம் முடிவடைய 14 எஞ்சியிருந்த நிலையில் குரோஷிய வீரர் ஒரு போல் போட்டதால் மீண்டும் சமநிலை அடைந்தது.
இந்த நிலையில் ஆட்டத்தின் முடிவை தேர்வு செய்ய பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குரோஷியா அணியினர் 4 கோல்களும், பிரேசில் அணி 2 கோல்கள் மட்டுமே போட்டதால் குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனது அணியின் தோல்வி காரணமாக கண்ணீருடன் சோகத்தில் மைதானத்தில் இருந்த போது, குரோஷியா அணியின் வீரர் விங்கர் இவான் பெரிசிச் என்பவரின் மகன் தனது தந்தை உள்பட குரோஷிய அணியினர் கொண்டாட்டத்தை கண்டுகொள்ளாமல் சோகத்தில் இருந்த நெய்மர் இடம் சென்று ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியான வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Ivan Perisic's son, Leo, ran over to console Neymar after the match ??
— ESPN FC (@ESPNFC) December 9, 2022
Sports. ❤️ pic.twitter.com/FobFDyG1Rj
The beautiful game ❤️ https://t.co/7etTzN393B
— Mabushi Mawela (@Mr_Mawela) December 9, 2022
Sports♥️ https://t.co/wKPLJHFVmo
— Shivani Tanna (@shivanitanna9) December 9, 2022
BEAUTIFUL SLICE OF HUMANITY ???? After having a truly iconic goal diluted by a heartbreaking World Cup loss to Croatia, Neymar is incredibly gracious when approached by Ivan Perisic’s son, who offers consolation. ???? pic.twitter.com/Kjkvn4QCS6
— Men in Blazers (@MenInBlazers) December 9, 2022
?? Lovely moment as a child from the celebrating Croatia squad - looks like Ivan Perisic family - runs over to console Neymar after #HRV shock Brazil to end #BRA dream of 1st #FIFAWorldCup since 2002 & record-extending 6th titlehttps://t.co/cyXMYoPulg@TheAthleticFC #Qatar2022 pic.twitter.com/HU2tZthP82
— David Ornstein (@David_Ornstein) December 9, 2022
Heartbreak for Neymar ?????? pic.twitter.com/EDLX3YZxHW
— FOX Soccer (@FOXSoccer) December 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com