தயவுசெய்து இப்படி யாரும் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்மீது வெறித்தனமாக இருக்கும் ரசிகர் ஒருவரின் செயலைப் பார்த்து தயவு செய்து இனிமேல் யாரும் இப்படி செய்ய வேண்டாம் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் தீவிர ரசிகர் ஒருவர் தனது கையில் ’ஹரிஷ் கல்யாண்’ பெயரை பச்சை குத்தி உள்ளார். இதனை அடுத்து அதில் ’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்றும் அந்த ரசிகர் குறிப்பிட்டு இதுகுறித்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
இதைப்பார்த்த ஹரிஷ் கல்யாண் கூறியபோது, ‘ என் மீது இவ்வளவு வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் ரசிகரை பார்க்கும் போது வார்த்தைகளே வெளிவரவில்லை. ஆனால் அதே நேரத்தில் தயவுசெய்து இப்படிப்பட்ட செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் ஹரீஸ் கல்யாணின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிஷ் கல்யாண் நடித்த ’தாராள பிரபு’ என்ற திரைப்படம் லாக்டவுனுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் ’கசடதபற’ உள்பட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Can’t explain this in words. Overwhelming emotions but at the same time pls don’t do such things my humble request to all the dear ones. Love you @HkNandha ❤️ Stay safe ?? https://t.co/nTsSfuVqRa
— Harish Kalyan (@iamharishkalyan) August 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments