இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆட்டநாயகர்கள் விருதினை பெற்ற காதல் ஜோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு முறையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும்போது இருநாட்டு ரசிகர்களும் போட்டியை போட்டியாக பார்ப்பதில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் போலத்தான் பார்ப்பதுண்டு. உடல் முழுவதும் தங்கள் நாட்டின் கொடியை வர்ணம் பூசிக்கொண்டு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது தேசப்பற்றை மைதானத்தில் காண்பிப்பார்கள்.
நேற்று நடைபெற்ற பிர்மிங்காம் இந்தியா-பாகிஸ்தான் போட்டியிலும் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் தத்தமது நாட்டிற்கு ஆதரவாக கோஷமிட்டாலும் இருநாட்டு ரசிகர்களையும் ஒருங்கே கவர்ந்தது ஒரு ஜோடியைத்தான்.
படத்தில் இருக்கும் இந்த ஜோடியில் பெண் ரசிகர் பாகிஸ்தான் நாட்டுக்கும், ஆண் ரசிகர் இந்தியாவுக்கும் ஆதரவாக குரல் எழுப்பினாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தோள் மீது கைபோட்டு கொண்டு காதலர் போல் காட்சி அளித்தனர். போட்டியை கவர் செய்ய வேண்டிய கேமிராக்கள் பெரும்பாலான நேரங்களில் இந்த ஜோடியையே கவர் செய்ததால் மைதானம் முழுக்க இந்த ஜோடி பிரபலம் ஆனார்கள். இந்த ஜோடி காதலர்களா? அல்லது கணவன் - மனைவியா என்பது தெரியவில்லை என்றாலும் போருக்கு நடுவே பூத்துக்குலுங்கிய இந்த காதல் ஜோடி தான் நேற்றைய ரசிகர்களின் ஆட்ட நாயகர்கள் என்பது மட்டும் உறுதியானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com