தனி வார்டில் வசதியில்லை: புகார் கூறிய 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் வசதி செய்து கொடுத்த முதல்வர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வார்டில் வசதியில்லை என புகார் அளித்த 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதி செய்து கொடுத்த முதல்வர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 5980 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லியில் 66 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஒருவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனி வார்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் கழிப்பறை உள்பட பல இடங்கள் தூய்மையாக இல்லை என்றும் வீடியோ ஒன்றின் மூலம் புகார் அளித்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்த நர்ஸ் இருக்கும் தனி வார்டுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின்பேரில் 3 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து புகார் அளித்த அதே நர்ஸ் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
A Corona positive Nurse complained about poor facilities in the quarantine centre.
— AAP (@AamAadmiParty) May 10, 2020
AAP govt resolved the issue as soon as possible and now the nursing staff is getting the best of facilities in a 3 Star hotel that AAP government is using for Corona Warriors.#DelhiFightsCorona pic.twitter.com/tUlX31aUdy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com