நிலவேம்பு டுவீட்: கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் 

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

டெங்கு காய்ச்சலுக்காக விநியோகம் செய்துவரும் நிலவேம்பு குடிநீர் குறித்து கமல் நேற்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த டுவிட்டுக்களுக்கு ஏற்கனவே பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

தேவராஜன் என்பவர் கொடுத்துள்ள இந்த புகாரில் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் பரப்பி வருவதாகவும், இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புகார் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகம் எந்தவிதமான நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

முன்னதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்' என்றும், 'ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்' என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.