'லப்பர் பந்து' நாயகி மீது போலீசார் வழக்குப்பதிவு.. புகார் கொடுத்ததும் ஒரு நடிகை தான்..!

  • IndiaGlitz, [Sunday,October 13 2024]

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’லப்பர் பந்து’ படத்தின் நாயகி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புகாரை அளித்தது ஒரு பிரபல நடிகை என்றும், இதனை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த நடிகை சுவாசிகா, ’லப்பர் பந்து’ படத்தில் நாயகியாக நடித்த நிலையில், அவர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். ஹேமா கமிஷன் வெளியான போது, அதன் பின்னர் சில நடிகைகள், பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார் அளித்தனர் என்பதும், இந்த புகார்களின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், நடிகை சுவாசிகா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புகார் அளித்த நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, சுவாசிகா மீது நடிகர் மற்றும் இயக்குனர் மீது ஹேமா கமிஷனில் புகார் அளித்த நடிகை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அஜித் மட்டுமல்ல,  கார் ரேசுக்கு தயாராகும் தமிழ் நடிகை.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக, ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார்

இந்த வாரம் எலிமினேஷன் யார்? ஜாக்குலின் கணிப்புக்கு விஜய் சேதுபதி பதிலடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில் இந்த வாரமே எலிமினேஷன் உண்டு என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 24 மணி நேர எலிமினேஷன்

மகன்கள் கையால் ஊழியர்களுக்கு ஆயுதபூஜை பரிசுப்பொருட்கள்.. நயனின் க்யூட் வீடியோ..!

நடிகை நயன்தாரா தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தன்னுடைய மகன்கள் கையால் ஆயுத பூஜை பரிசு பொருட்கள் வழங்கிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்த வச்சிட்டியே பரட்ட.. பவித்ராவை எல்லோர் முன்னிலையில் போட்டு கொடுத்த விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, ஒருவரை பற்றி பேசும்போது பூசி மெழுகாமல், மறைமுகமாக கூறாமல் நேரடியாக முகத்துக்கு நேரில் அவருடைய தவறை கேள்வி கேட்கும்

உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்.. 'கோட்' வசூலை மிஞ்சிய லேட்டஸ்ட் ரிலீஸ் படம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பு தரப்பிலிருந்து இந்த படம் உலகம் முழுவதும் 455 கோடி