close
Choose your channels

ரஜினி, விஜய், தனுஷ் படங்களின் டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்.. கைதாவாரா?

Monday, September 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற தமன்னாவின் ‘காவலா’ பாடல் உள்பட பல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் ஜானி மாஸ்டர். ‘ஜெயிலர்’ படம் மட்டுமின்றி விஜய்யின் ‘பீஸ்ட்’, தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும் ஏராளமான தெலுங்கு படங்களுக்கும் நடன இயக்குனராக பணிபுரிந்த ஜானி மாஸ்டர்

இந்நிலையில் ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம்பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் நடன கலைஞர் ஒருவர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதாகவும் படப்பிடிப்பின் போது பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் பாலியல் குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் கிடைத்தால் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment