'பேட்ட'- 'விஸ்வாசம்' டிரைலர்கள் ஒரு ஒப்பீடு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படங்களின் புரமோஷன்கள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் குறித்த சில ஒப்பீடுகளை பார்ப்போம்
1. டிசம்பர் 27ஆம் தேதி 'பேட்ட' திரைப்படத்தின் டிரைலரும், டிசம்பர் 30ஆம் தேதி 'விஸ்வாசம்' படத்தின் டிரைலரும் வெளியானது.
2. பேட்ட டிரைலரின் ரன்னிங் டைம் 2.29 நிமிடங்கள். 'விஸ்வாசம்' டிரைலரிங் ரன்னிங் டைம் 2.15 நிமிடங்கள்
3. 'பேட்ட' டிரைலர் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த டிரைலருக்கு சுமார் ஒரு கோடியே 51 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். ஆனால் 'விஸ்வாசம்' டிரைலர் வெளியான ஒரே நாளில் சுமார் ஒரு கோடியே 25 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
4. அதேபோல் 'பேட்ட' டிரைலருக்கு ஐந்து நாட்களில் சுமார் 6 லட்சத்து 35 ஆயிரம் லைக்ஸ்கள் கிடைத்துள்ள நிலையில் 'விஸ்வாசம்' டிரைலருக்கு ஒரே நாளில் 1.1 மில்லியன் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. ஆனால் 'பேட்ட' டிரைலருக்கு 60 ஆயிரம் டிஸ்லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் 'விஸ்வாசம்' டிரைலருக்கு ஒரு லட்சத்து 91 ஆயிரம் டிஸ்லைக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5. மேலும் 'பேட்ட' டிரைலருக்கு ஐந்து நாட்களில் சுமார் 29ஆயிரம் கமெண்ட்டுக்கள் பதிவான நிலையில் 'விஸ்வாசம்' டிரைலருக்கு சுமார் 90 ஆயிரம் கமெண்டுக்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களை பொருத்தவரை ரஜினியின் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை விட அஜித் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் கள நிலவரத்தில், வசூலில் யார் முந்துகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments