பெரியபாண்டி குடும்பத்துக்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு திடீர் மூடல்
- IndiaGlitz, [Friday,December 15 2017]
ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த பெரியபாண்டிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவரது மகனின் முழு கல்விச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் சிலரும், நல்ல உள்ளம் கொண்ட பலரும் பெரியபாண்டி குடும்பத்தினர்களுக்கு நிதியுதவி செய்ய விரும்பினர் இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஒரு வங்கிக்கணக்கை ஆரம்பித்து அந்த வங்கியின் முழு விபரங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த வங்கிக்கணக்கில் விருப்பம் உள்ளவர்கள் பணம் டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த வங்கிக்கணக்கு குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. எனவே வீரமரணம் அடைந்த ஒரு தியாகியின் உயிர்த்தியாகத்திற்கு எந்தவித இழுக்கும் நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தற்போது அந்த வங்கிக்கணக்கை காவல்துறையினர்களே மூடிவிட்டனர். மேலும் அந்த வங்கிக்கணக்கில் யாரும் பணம் டெபாசிட் போட வேண்டாம் என்று சென்னை மாநகர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது