2 வயதுக்கு குறைவான குழந்தையா??? மாஸ்க் போடாதீங்க... எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான் மருத்துவ சங்கம்!!!

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

 

ஜப்பான் நாட்டின் குழந்தை மருத்துவச் சங்கம் தற்போது நாடு முழுவதும் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு முகமூடிகளை அணிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முகமூடிகளை அணிவது கட்டாயம் என பரிந்துரை செய்கின்றனர். ஆனால் பயன்பாட்டில் இருக்கும் அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N95 முகமூடிகள் குழந்தைகளுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அது ஆபத்தில் கூட முடியலாம் என்றும் தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

முன்னதாக தாய்லாந்து நாட்டின் மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கண்ணாடி அட்டையை வைத்து முகத்தை இறுக்காத வண்ணம் முகமூடிகளை உருவாக்கி இருந்தார்கள். அந்த வகையான முகமூடிகள் குழந்தைகளின் சுவாசத்தை தடை செய்யாது. ஆனால் அறுவைச் சிகிச்சை முகமூடி மற்றும் என்95 முகமூடிகள் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இதேபோல அமெரிக்காவின் நோய்த் கட்டுப்பாட்டு மையமும் குழந்தைகளுக்கு மாஸ்க்குகளை அணிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு அமெரிக்காவில் முகமூடிகள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகச் சுகாதார அமைப்பும் முகமூடிகளை கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறவில்லை. வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஏற்கனவே நோயினால் அவதிப்படுவர்கள் மட்டும் முகமூடி அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது.

More News

மூன்று முறை திருமணமான 62 வயது பெண்ணுடன் 26 வயது இளைஞர் காதல்!

மூன்று முறை திருமணமாகி மகன்கள், மகள்கள் பேரக் குழந்தைகள் இருக்கும் 62 வயது மூதாட்டி ஒருவரை 26 வயது இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரசிகரின் குறும்பான கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் அர்த்தமுள்ள பதில்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் வெகு அரிதாகவே ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுவார் என்பதும் அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

பிராமணர் சர்ச்சை, உச்சபட்ச ஆபாசம்: 'காட்மேன்' வெப்சீரீஸ் டீசர்!

திரைப்படங்களுக்கு இருப்பது போல் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் பெரும்பாலான வெப்சீரிஸ்களில் ஆபாசம், வன்முறை ஆகிய காட்சிகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 9 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் நிலவும் புதிய சர்ச்சை??? உலகப் போருக்கான அறிகுறியா இது??? பரபரப்பை ஏற்படுத்தும் அரசியல் காரணம்!!!

இந்தியாவில் கொரோனா ஒருபக்கம் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் வேளையில், இன்னொரு பக்கம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சீன அரசு இராணுவ வீரர்களை குவித்து வருகிறது.