2 வயதுக்கு குறைவான குழந்தையா??? மாஸ்க் போடாதீங்க... எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான் மருத்துவ சங்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜப்பான் நாட்டின் குழந்தை மருத்துவச் சங்கம் தற்போது நாடு முழுவதும் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு முகமூடிகளை அணிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முகமூடிகளை அணிவது கட்டாயம் என பரிந்துரை செய்கின்றனர். ஆனால் பயன்பாட்டில் இருக்கும் அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N95 முகமூடிகள் குழந்தைகளுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அது ஆபத்தில் கூட முடியலாம் என்றும் தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
முன்னதாக தாய்லாந்து நாட்டின் மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கண்ணாடி அட்டையை வைத்து முகத்தை இறுக்காத வண்ணம் முகமூடிகளை உருவாக்கி இருந்தார்கள். அந்த வகையான முகமூடிகள் குழந்தைகளின் சுவாசத்தை தடை செய்யாது. ஆனால் அறுவைச் சிகிச்சை முகமூடி மற்றும் என்95 முகமூடிகள் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இதேபோல அமெரிக்காவின் நோய்த் கட்டுப்பாட்டு மையமும் குழந்தைகளுக்கு மாஸ்க்குகளை அணிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு அமெரிக்காவில் முகமூடிகள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகச் சுகாதார அமைப்பும் முகமூடிகளை கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறவில்லை. வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஏற்கனவே நோயினால் அவதிப்படுவர்கள் மட்டும் முகமூடி அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments