இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ் மீது கிரிமினல் வழக்கா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்களால் 'டூயட்' படத்தில் அறிமுகமான பிரகாஷ்ராஜ் அதன் பின்னர் நாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னர் பாஜகவையும் பிரதமர் மோடியையும் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பசு குறித்து மோசமாக விமர்சனம் செய்ததாகவும், ஒருசில மேடைகளில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout