டிக்டாக் ஜிபி முத்துவுடன் அதிவேக பைக் பயணம்: பிரபல யூடியூபர் மீது வழக்குப்பதிவு!

  • IndiaGlitz, [Wednesday,September 21 2022]

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பின்னால் வைத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டியதாக பிரபல யூடியூபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல யூடியூபர் வாசன் என்பவர் அவ்வப்போது பைக்கில் வளைந்து நெளிந்தும் சாகசம் செய்யும் வீடியோவை தனது யூடியூப் சேனல் உள்பட சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை தனது பைக்கில் அமர வைத்து பைக்கை மிக வேகமாக இயக்கி உள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல் நிலையம் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும், அபாயமாகவும் பைக் ஓட்டுதல், மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதத்தில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் யூடியூபர் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.