யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு: மறுதணிக்கையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’மண்டேலா’. ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் அரசியல் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதும் மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் இந்த படத்தை ரசித்து பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தை மறு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் அதனால் தங்களது மருத்துவர் சமுதாய மக்களின் மனம் புண்பட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் மருத்துவர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தை மறு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது, ’மண்டேலா’ திரைப்படம் மறு தணிக்கை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout