செல்போனில் இளம்பெண்ணிடம் தகாத பேச்சு: தமிழ் நடிகர் மீது வழக்குப்பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
இளம்பெண் ஒருவரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளில் பேசிய தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகர் வினாயகன் என்பவர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண் சமூக சேவகி மிருதுளா சசிதரன் என்பவர் தனது முகநூலில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் வினாயகன் பெண் சமூக சேவகி மிருதுளா சசிதரனிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு மிருதுளா தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் வினாயகனை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மிருதுளா கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்பற்றா பகுதி போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் வினாயகன், தனுஷ் நடித்த 'மரியான்', சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்', விஷால் நடித்த 'திமிறு' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments