காவலர் தாக்கப்பட்ட விவகாரம்: சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சிஎஸ்கே பனியன் போட்ட ரசிகர்களை தாக்கிய வீடியோவும், காவலர்களை தாக்கிய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சீருடை அணிந்த காவலர்களை தாக்கியது வன்முறையின் உச்சகட்டம் என்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய போராட்டத்தின்போது காவலரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்ட வைரமுத்து, பாரதிராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் சாலை மறியல், மைதானத்திற்குள் காலணி வீச்சு உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன,

More News

காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஏற்கனவே 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஜடேஜா குறித்து அன்றே சொன்னார் தோனி

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை வென்றது.

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தார் அமைச்சர் ஜெயகுமார்

ஐபிஎல் போட்டிக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

உலகின் அதிக பார்வையாளர்களை பெற்ற யூடியூப் வீடியோ திடீர் மாயம்

யூடியூப் இணையதளத்தில் உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த வீடியோக்கள் Vevo யூடியூப் அக்கவுண்டில்தான் உள்ளது. இதில் உள்ள மியூசிக் வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

வன்முறையின் உச்சகட்டமே இதுதான்: ரஜினிகாந்த்

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.