கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு: தூத்துகுடி காவல்துறையினர் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று தூத்துகுடியில் நடந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக 11 பேர் பலியாகினர். மேலும் பல அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டினால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறவும் இன்று காலை கமல்ஹாசன் தனி விமானத்தில் தூத்துகுடி சென்றார். மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்தவர்களை பார்த்து கண்ணீருடன் ஆறுதல் கூறிய கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இழந்த உயிர்களுக்கு ஒரே மாற்று ஆலையை மூடுவது தான் என்றும் உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வின்போது நடுநிலையான மருத்துவர்கள் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் தூத்துகுடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதனை மீறி கமல்ஹாசன் நடந்து கொண்டதாக அவர் மீது தூத்துகுடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout