ரஜினியின் 'காலா' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் திரைப்படம் 'காலா'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'காலா' திரைப்படம் 'கரிகாலன்' என்ற அடைமொழியுடன் தயாராகி வருவதாகவும், கரிகாலன் என்ற டைட்டிலும் கதையும் தன்னுடையது என்றும் ராஜசேகரன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜசேகரன் மனுவிற்கு பதிலளித்த காலா' குழுவினர் 'காப்புரிமை சட்டத்தின் கீழ்தான் இந்த வழக்கை விசாரணை செய்ய முடியும் என்று கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ராஜசேகரனின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட அறிவுறுத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகரன் மீண்டும் வழக்கு தொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout