முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
- IndiaGlitz, [Sunday,March 28 2021]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக எம்பி ஆ ராசா முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறினார். இந்த கருத்துக்கு திமுகவினர் ஒருசிலர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி தொகுதி உள்பட பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள செய்யப்பட்டுள்ளது
முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.