பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,May 15 2020]

144 தடை உத்தரவான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் விழுப்புரம் அருகே ஜெயஸ்ரீ என்ற மாணவியை அவரது உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்றார். மேலும் ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’ஜெயஸ்ரீயை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஜெயஸ்ரீ வீட்டுக்கு சுமார் 30 பேர்களுடன் கூட்டமாக சென்றதால் அவர் மீது போலீசார் ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்

இதேபோல் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களும் ஜெயஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை அடுத்து அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீயை சந்திக்க செல்லும்போது 30க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக சென்றதால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்

More News

மக்கள் உயிர் தான் முக்கியம், வருமானம் அல்ல: டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கருத்து

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு

கடந்த 10 நாட்களில் குறைவான கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் தமிழகம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 700க்கும் மேற்பட்டோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்திய நிலையில் நேற்று 509 பேருக்கு கொரோனா

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்: நிர்மலா சீதாராமன்

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாடியபோது ரூ.20 லட்சம் கோடிக்கான நலத்திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.

கொரோனா சர்ச்சையில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கிறதா இந்தியா???

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தனிமைப்படுத்திய விவகாரம்: நடிகர் ராதாரவி விளக்கம்!

நடிகர் ராதாரவி சமீபத்தில் சென்னையில் இருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினர்களுடன் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் அங்குள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி