பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
144 தடை உத்தரவான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் விழுப்புரம் அருகே ஜெயஸ்ரீ என்ற மாணவியை அவரது உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்றார். மேலும் ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’ஜெயஸ்ரீயை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஜெயஸ்ரீ வீட்டுக்கு சுமார் 30 பேர்களுடன் கூட்டமாக சென்றதால் அவர் மீது போலீசார் ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதேபோல் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களும் ஜெயஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை அடுத்து அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீயை சந்திக்க செல்லும்போது 30க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக சென்றதால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout