ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு:
- IndiaGlitz, [Tuesday,June 11 2019]
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், சோழமன்னர் ராஜராஜ சோழனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பா.ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதி, மத, இன உணர்வுகளை தூண்டுதல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஞ்சித், 'ராஜராஜ சோழன் காலத்தில் தான் தலித் இடங்கள் அபகரிக்கப்பட்டதாகவும், தலித் பெண்கள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டதாகவும், தலித்துக்கள் பறிகொடுத்த நிலங்களை மீட்க தலித் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும் என்றும் பேசியதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.
இதனையடுத்து தஞ்சையை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil casteist film director PA.Ranjith calls the rule of great Raja Raja Chola, who built magnificent Tanjore big temple as "Dark Rule".
— Saiganesh சாய்கணேஷ் (@im_saiganesh) June 9, 2019
He says :
1) Lands of his caste are grabbed under Raja Raja Chola by conspiracy.
2) Caste oppression started by Raja Raja Chola.
(Cont..) pic.twitter.com/ek3LT9cNYs