'சக்ரா' படத்திற்கு எதிராக வழக்கு: விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,September 22 2020]

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் திரையுலகின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ’சக்ரா’ படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனத்திடம் கூறிய அதே கதையை தான் இயக்குனர் ஆனந்தன் விஷாலை வைத்து ’சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்து உள்ளதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது

மேலும் விஷால் நடித்த ’ஆக்சன்’ படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த நஷ்டத்தை சரிக்கட்ட ரூபாய் 8 கோடியே 29 லட்சம் தருவதாக விஷால் ஒப்புக் கொண்டதாகவும் அந்த பணத்தை உடனடியாக அவர் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் வரும் 24-ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தன் ஆகிய இருவருக்கும் சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ் குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
 

More News

எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்: 'வலிமை' நடிகர் டுவீட்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக

ரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா??? சுவாரசியத் தகவல்!!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன ரஃபேல் ரகப் போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.

ஒரு Subscribe பட்டனை அழுத்தியதற்கு 40 கார்கள் பரிசு… மலைப்பை ஏற்படுத்தும் சம்பவம்!!!

யூடியூப் சேனலை நடத்தி வருபவர்களுக்கு பெரும்பாலும் அவர்களின் Subscribe எண்ணிக்கையைப் பொருத்தே வருமானம் கிடைக்கும்.

கொரேனா பரவலைத் தடுக்க அயோடின் கரைசலா??? அதிரடி காட்டும் புதுத்தகவல்!!!

அயோடின் கரைசல் கொரோனா வைரஸை முற்றிலும் செயலிழக்க செய்யும் என்ற புதுத்தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

ஹிந்தி தெரியாதா… அப்ப லோன் இல்ல… வங்கி மேலாளரின் செயலால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!!!

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் அரசு தலைமை மருத்துராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாலசுப்பிரமணியம்.