இயக்குனர்கள், நடிகர்களை அடுத்து முதல்வர் மீது அவதூறு பேச்சு.. நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய நிலையில் தற்போது முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஸ்ரீ ரெட்டி திடீரென தெலுங்கு திரையுலக பிரபல இயக்குனர்கள் நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். தனக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் திடீரென சாலையில் உட்கார்ந்து ஆடைகளை களைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது குற்றச்சாட்டுக்கு சில தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனரும் உள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சில அமைச்சர்கள் ஆகியவர்கள் குறித்து அவதூறாக பேசி உள்ளதை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments