மன்னிப்பு கேட்ட பின்னரும் வழக்குப்பதிவு: சிக்கலில் சித்தார்த்?

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சித்தார்த் மன்னிப்பு கேட்ட பின்னரும் அவர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தெரிவித்த ட்வீட் ஒன்றுக்கு பதிலளித்த நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்த நிலையில் அவர் சமீபத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அவரது மன்னிப்பை சாய்னா நேவல் ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சித்தார்த் மீது பிரேனா என்ற பெண் புகார் அளித்ததை அடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் சித்தார்த் மீது 2 பிரிவுகளில் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கால் சித்தார்த்துக்கு சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

வேறு ஒரு அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்த அக்கா: அதிதி ஷங்கர் குறித்து 'பிகில்' நடிகை!

வேற ஒரு அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்த அக்காதான் அதிதி ஷங்கர் என 'பிகில்' படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஷங்கரின் மகள் குறித்து கூறியிருப்பது பெரும்

'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்': சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' என்ற திரைப்படத்தில் மீண்டும் வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகிறார் என்பதும் இந்த படத்தின் பாடல் கம்போசிங் பணிகளுக்காக சமீபத்தில்

ஜிம்மில் பிறந்த நாள் கொண்டாடிய பிரியா பவானிசங்கர்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் பிறந்தநாள் கொண்டாடிய

ஹீரோவாகும் இன்னொரு பிரபல தமிழ் இயக்குனர்: டீசர் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பலர் ஹீரோவாக நடித்து உள்ளனர் என்பதும், குறிப்பாக பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, சசிகுமார், சேரன், கேஎஸ் ரவிக்குமார், சுந்தர் சி

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்

நடிகர் விஷாலின் 33வது திரைப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் வெளியான இந்த டைட்டில் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.