திரைப்பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை.. பிரபல நடிகர் மீது பெண் புகார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னணி மலையாள நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் குற்றச்சாட்டு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’நேரம்’ என்ற தமிழ் படத்திலும் பல மலையாள படத்திலும் நடித்த நடிகர் நிவின்பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது குறித்த செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் நான் நிரபராதி என்று நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெண் ஒருவரை நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என்பதை அனைவரும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். என் மீதான இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக உள்ளேன். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். ரசிகர்கள் அக்கறையுடன் என்னுடைய பக்கம் இருப்பதற்கு நன்றி, அனைத்தும் சட்டப்படி எதிர்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக திரைப்படத்தில் வாய்ப்பு வழங்கி தருவதாக கூறி வெளிநாட்டில் தன்னுடன் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நிவின் பாலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
— Nivin Pauly (@NivinOfficial) September 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments