'மாஸ்டர்' படத்தில் கார் சேஸிங் காட்சி: பிரபல நடிகையின் மறக்க முடியாத அனுபவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தான் என்றாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடித்து உள்ளார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த ஆண்ட்ரியா ’மாஸ்டர்’ படத்தில் எனக்கும் விஜய்க்கும் ஒரு கார் சேசிங் காட்சி இருக்கிறது என்றும் அதை பார்க்கும் போது எந்த அளவுக்கு அற்புதமான காட்சி என்று உங்களுக்கே புரியும் என்றும் அந்த அளவுக்கு எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அந்த காட்சி இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’மாஸ்டர்’ படத்தில் ஒரு அட்டகாசமான கார் சேஸிங் காட்சி உள்ளது என்பது தெரிய வந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மேலும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் ‘வெறித்தனம்’ பாடலை அவ்வப்போது பாடிக்கொண்டிருப்பார் என்றும், அதன் பின்னர் தான் அந்த பாட்டை நான் கூகுளில் பார்த்து விஜய்யை பாராட்டியதாகவும், அதற்கு அவர் ‘இப்பதான் இந்த பாட்டை கேட்குறிங்களா? நீங்க தமிழ்நாட்டில தான இருக்கிங்க என்று கூறிவிட்டு ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடினோமே அந்த பாட்டையாவது கேட்டிங்களா? என்று கலாய்த்ததாகவும் அந்த பேட்டியில் ஆண்ட்ரியா கூறியுள்ளார். விஜய்யும் ஆண்ட்ரியாவும் சேர்ந்து பாடிய பாட்டு ‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்ற ‘கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்’ என்ற பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout