நிர்பயா வழக்கை மிஞ்சும் கொடூரம்… இளம்பெண்ணை துன்புறுத்தியே கொன்ற கும்பல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓடும் பேருந்தில் இளம் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தின் பதுன் மாவட்டத்தை உள்ள உகாய்தி எனும் கிராமத்தில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை காரில் வந்த 3 பேர் கடத்தி சென்றுள்ளனர். யாரும் இல்லாத காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அப்பெண்ணை அந்த 3 பேரும் மாறி மாறி கற்பழித்து உள்ளனர். ‘
அதோடு இதற்கு மறுப்புத் தெரிவித்த அப்பெண்ணை 3 பேரும் கொடூரமாகத் தாக்கி அவரது பிறப்புறுப்பில் கம்பியை வைத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இடுப்பு எலும்பு முறிந்து, மயங்கி நிலைக்கு சென்று விட்ட அப்பெண்ணை முட் புதருக்குள் வீசிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பாத மகளைத் தேடிய அவரது குடும்பத்தார் மறுநாள் காலையில் இறந்த நிலையிலேயே மீட்டு உள்ளனர்.
இச்சம்பவம் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் சந்தேகத்திற்கு உரியவர்களாக கருதப்படும் மகான்பாபா சத்திய நாராயணா, அவரது உதவியாளர் வேதராம் மற்றும் கார் டிரைவர் ஜெயராம் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments