நிர்பயா வழக்கை மிஞ்சும் கொடூரம்… இளம்பெண்ணை துன்புறுத்தியே கொன்ற கும்பல்!!!

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓடும் பேருந்தில் இளம் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலத்தின் பதுன் மாவட்டத்தை உள்ள உகாய்தி எனும் கிராமத்தில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை காரில் வந்த 3 பேர் கடத்தி சென்றுள்ளனர். யாரும் இல்லாத காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அப்பெண்ணை அந்த 3 பேரும் மாறி மாறி கற்பழித்து உள்ளனர். ‘

அதோடு இதற்கு மறுப்புத் தெரிவித்த அப்பெண்ணை 3 பேரும் கொடூரமாகத் தாக்கி அவரது பிறப்புறுப்பில் கம்பியை வைத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இடுப்பு எலும்பு முறிந்து, மயங்கி நிலைக்கு சென்று விட்ட அப்பெண்ணை முட் புதருக்குள் வீசிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பாத மகளைத் தேடிய அவரது குடும்பத்தார் மறுநாள் காலையில் இறந்த நிலையிலேயே மீட்டு உள்ளனர்.

இச்சம்பவம் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் சந்தேகத்திற்கு உரியவர்களாக கருதப்படும் மகான்பாபா சத்திய நாராயணா, அவரது உதவியாளர் வேதராம் மற்றும் கார் டிரைவர் ஜெயராம் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

'மாஸ்டருக்கு பின் ரிலீஸாகும் பிரபல நடிகரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

ரஜினியின் அரசியல் முடிவில் திடீர் மாற்றமா? சாமியாரை சந்தித்ததால் திடீர் திருப்பம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் அரசியலுக்கு வரவில்லை என்றும் சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது… சூடு பிடிக்கும் விசாரணை!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பண்ணை வீடுகளில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

ரசிகர்களின் கோரிக்கை நிறைவேற்றம்: 'கோப்ரா' டீசர் தேதி அறிவிப்பு

சியான் விக்ரம் 8 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

ஆரியை கட்டம் கட்ட பாலாஜியை ஆதரிக்கும் ரியோ-சோம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்களின் வருகைக்கு பின் ஆரிக்கு மிகப்பெரிய ஆதரவு வெளியில் இருப்பது அனைவருக்கும் தெரிந்து விட்டதால்