டிவிட்டரில் வைரலாகும் இட்லி சண்டை… பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வரை சூடு பறக்கும் விவாதம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிட்டனை சேர்ந்த பிரபல வரலாற்று பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தென்னிந்திய உணவான இட்லியை குறைவாக மதிப்பிட்டு ஒரு பதிவை போட்டு இருக்கிறார். இந்தப் பதிவிற்கு இந்தியாவை சேர்ந்த பலரும், அதிலும் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் தனது கருத்துகளை தெரிவிக்க தற்போது டிவிட்டர் முழுக்க இட்லி சண்டையே வியாபிதித்து இருக்கிறது.
பல நூற்றாண்டு காலமாக தென்னிந்தியாவின் பிரபல உணவாக இட்லி இருந்து வருகிறது. இதன் தயாரிப்பும் மிக எளிமை. அதோடு மிக குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒரு உணவாகவும் இது இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் இட்லிக்கு சட்னி இல்லையென்றால் வீட்டை இரண்டாக உடைக்கும் பல முரட்டு பிரியர்கள் இருக்கும் நிலையில், பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் “இட்லிதான் உலகில் மிகவும் சலிப்பான விடயம்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப் பதிவிற்கு எழுத்தாளரான இஷான் தரூர் எதிர்ப்புத் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இதோடு விட்டாலும் பரவாயில்லை, மகனுக்கு ஆதரவாக தற்போது சசிர் தரூரும் களத்தில் இறங்கி விட்டார். மேலும் இட்லியை எப்படி தயாரிப்பது, அதை எப்படி ருசியாக உண்பது என்பது வரை பல விடயங்களையும் சசி தரூர் பதிவிட அவருக்கு ஆதரவாக பல இந்தியர்களும் கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.
இப்படி டிவிட்டலில் இட்லி சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே பிபிசி தனது பங்கிற்கு அமெரிக்காவின் துணை அதிபர் பதிவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் இட்லி குறித்து பெருமையாக பேசியிருந்தை தனது செய்தி குறிப்பில் தெரிவித்து இருந்தது. கமலா ஹாரிஸ் இந்தியாவிற்கு வரும்போது அவருடைய அம்மாவின் கையால் இட்லி சாப்பிடுவதைக் குறித்த அனுபவத்தை அவர் கூட்டங்களில் பேசியிருந்ததாகவும் அந்த செய்தி குறிப்பு குறிப்பிட்டு இருந்தது. இதே போல பல வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இட்லிக்கு ஆதரவு தெரிவித்து டிவிட்டரில் போர்க்கொடி தூக்கி வந்தனர்.
ஆனால் எட்வர்ட் ஆண்டர்சன் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்வதாய் இல்லை. இந்த விவாதத்தின் போது, இடையில் நான் மதியம் இட்லியை ஆர்டர் செய்து சாப்பிட்டேன். அப்போதும் சலிப்பைத்தான் ஏற்படுத்தியது என மீண்டும் கூறியிருக்கிறார் எட்வர்ட் ஆண்டர்சன். மேலும் சில சுவாரசிய அனுபவங்களையும் அவர் தனது பதிவில் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய மனைவி கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். அதனால் நான் இந்தியாவில் பல வருடங்கள் தங்கியிருக்கிறேன். அப்போது என் மாமியார் காலை உணவாக இட்லியைத்தான் கொடுப்பார்கள்.
இந்தியாவின் பூர்வீகத்தோடும் அவர்களின் உணர்வுகளோடும் இந்த உணவு ஒட்டிக் கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. இப்பாது டிவிட்டரில் நடைபெற்ற விவாதத்திலும் அதை என்னால் பார்க்க முடிந்தது எனத் தெரிவித்து இருக்கிறார். பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியரின் இந்த இட்லி கருத்தை நம்முடைய பெரும்பலான நெட்டிசன்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும் சிலர் கோபப்படவும் செய்தனர்.
Fantastic. My stupid idli comment has now been connected - ever so tenuously - to the US election. For the record: I love Indian food... and especially south Indian food! (Just not idlis). https://t.co/tLtzhlVFOF
— Edward Anderson (@edanderson101) October 9, 2020
Another twist in the tale of idli-gate. (He must be keeping an eye on me to make sure I don't denounce any other South Indian delicacies.... which I won't!) https://t.co/qx2VRJw6EO pic.twitter.com/td09cnzhby
— Edward Anderson (@edanderson101) October 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments