அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித் நேற்று சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது தரப்பிலிருந்து கூறப்பட்ட தகவலின் படி அஜித்துக்கு சாதாரண மருத்துவ பரிசோதனை தான் செய்யப்படுவதாகவும் விரைவில் அவர் வெளிநாட்டுக்கு படப்பிடிப்பு செல்ல இருப்பதால் அதற்கு முன் நடக்கும் வழக்கமான பரிசோதனை தான் என்றும் கூறப்பட்டது.
ஆனால் நேற்று இரவு திடீரென அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அஜித்துக்கு பரிசோதனை செய்தபோது அவரது மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய போது அதற்கு அஜித் ஒப்புக் கொண்டதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்கள் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்து அவரது தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com