நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,September 28 2020]

பிரபல நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாக ஆக்கபூர்வமான சமூக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் இதனையடுத்து அவருக்கு பெரும்பாலானோர் பாராட்டுக்களும் ஒரு சிலர் மட்டும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

சமீபத்தில் கூட நீட் தேர்வு குறித்து அவர் வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாமரர்கள் முதல் நீதிமன்ற நீதிபதிகள் வரை அவருடைய அறிக்கை குறித்து விவாதம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யாவின் அலுவலகத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்

நடிகர் சூர்யா அலுவலகத்தை மாற்றியது கூட தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் சூர்யாவின் பழைய அலுவலகமான ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதனையடுத்து அங்கு மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

நீட்தேர்வு உள்பட பல்வேறு சமூக கருத்துக்களை தைரியமாக கூறிவரும் சூர்யாவை பயமுறுத்துவதற்கா இந்த வெடிகுண்டு மிரட்டல்? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்
 

More News

விஜயகாந்த் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்??? புது விளக்கம்!!!

ஊழர் புகார் குறித்த தகவல்கள் மொட்டை (அடையாளம் காண முடியாத நபர்) கடிதம் மூலம் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தது.

இசை மேதையுடன் எஸ்பிபி: அரிய புகைப்படத்தை வெளியிட்ட விவேக்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான நிலையில் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அவருடன் பழகிய நாட்கள்,

30 நாட்களில் உருவாகும் சிம்பு படம்: 'மாநாடு'க்கு முன் முடிக்க திட்டம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'.