ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: தமிழ் திரையுலகில் பரபரப்பு

அரசியல் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது கடந்த சில மாதங்களாக சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்பட சில திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது என்பதும் அதன் பின்னர் அது புரளி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது இன்று ஒரே நாளில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் ஆகிய இருவருடைய வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோல் விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துத்துள்ளதாக தெரிகிறது. மேலும் தனுஷ் மற்றும் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது ஒரே நபர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து மோப்பநாய் வெடிகுண்டு தடுப்பு பிரிவுகள் இருவரது வீட்டில் சோதனை செய்ததில் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போன் மூலம் மிரட்டல் விடுத்த அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

More News

அப்படியெல்லாம் போக முடியாது பதில் சொல்லிட்டு போங்க: ரியோவிடம் மீண்டும் சிக்கிய சுரேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அனிதா சம்பத் கூறியதுபோல் புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே சுரேஷ் சக்ரவர்த்தி அனைவரிடமும் பிரச்சனை செய்கிறாரே என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது 

கொரோனாவுக்கே டஃப் கெடுக்கும் புது வைரஸ்… சென்னை, மதுரையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பரபரப்பு!!!

கொரோனா வைரஸை ஒழிக்க முடியாமல் உலகமே தவித்து வரும் நிலையில் குழந்தைகளைத் தாக்கும் புதிய வைரஸ் சென்னை மற்றும் மதுரையில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆடு மேய்த்தற்காக மற்றவர்கள் காலில் விழ வைத்தச் சம்பவம்… பட்டியல் இனத்தவருக்கு நேர்ந்த கொடுமை!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆடு மேய்த்த குற்றத்திற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பால்ராஜ்

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த டாக்டர்: உடல்நலமின்றி வெளியேறிய போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அறந்தாங்கி நிஷாவின் அரட்டைகளும், சுரேஷ் சக்கரவர்த்தியின் சேட்டைகளும் தினந்தோறும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக

நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென விலகிய கமல், தனுஷ் பட நடிகை!

இயக்குனர் சசி இயக்கிய 'பூ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை பார்வதி, அதன் பின்னர் சரத்குமாரின் 'சென்னையில் ஒரு நாள்' தனுஷின் 'மரியான்' கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்'