சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சற்று முன்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்றில் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு தொலைபேசி அழைப்பை கட் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிரடியாக காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சென்று அவரது வீட்டை சோதனை செய்தனர். ஆனால் சோதனைக்கு பின் ரஜினி வீட்டில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது உறுதியானதை அடுத்து இந்த அழைப்பு வதந்தி என்பது உறுதியானது
இதனை அடுத்து ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com