தன்னை தானே பெயிண்டிங் வரையும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,May 30 2021]

பிரபல நடிகை ஒருவர் தனக்கு தானே போஸ் கொடுத்துக் கொண்டு தன்னைத்தானே பெயிண்டிங் வரைவது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என்பதும் இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இவர் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பதினொரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஜான்வி கபூர் அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னைத்தானே பெயிண்டிங் வரைவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்பொழுது நான் என்னையே பெயிண்டர் என்று கூறிக் கொள்ளலாம் என்றும் அவர் கேப்ஷனாக அந்த பதிவில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட சுமார் 80,000 பேர் 30 நிமிடத்தில் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.