அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை!!! தொடரும் அவலம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி போலீஸார் பிடியில் இருந்தபோது, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் இனவெறுப்பினால் கொல்லப்பட்டச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது கொலையைக் கண்டித்து தொடர்ந்த போராட்டங்கள் இன்னும் முடிவுறாத நிலையில் தற்போது இதேபோன்ற இன்னொரு சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா பகுதியில் உணவகம் அருகே ஒரு கறுப்பின இளைஞர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்றத்தை தொடர்ந்து அட்லாண்டா பகுதி முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது, கொலையைக் கண்டித்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று அட்லாண்டா பகுதியின் தலைமை காவலர் எரிகா ஷீல்டு பதவி விலகி உள்ளார். அந்நகர மேயர் கெய்ஷா லேண்ட் இச்சம்பவத்தைக் குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். “ரைசார்டு புரூக்ஸ் என்ற 27 வயதான இளைஞர் அட்லாண்டா பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகே காரில் படுத்து உறங்கியிருக்கிறார். உணவகத்தின் வழியை அடைத்துக் கொண்டு அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காவல் அதிகாரிகள் அவரது காரை அணுகி அந்த இடத்தை விட்டு போகுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர்.
அப்போது இளைஞருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அந்நிலையில் இளைஞர் போலீசாரின் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்த மற்ற போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்தச் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்துள்ளார்” இவ்வாறு அந்நகர மேயர் கெய்ஷா லேண்ட் குறிப்பிட்டு இருக்கிறார். இறந்த இளைஞருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல் அதிகாரி தற்போது பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் நடைபெற்ற உடனே அப்பகுதியில் கடும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சம்பவத்துக்கு காரணமான உணவகம் போராட்டக் காரர்களால் தீ வைத்து எரிக்கப் பட்டு இருக்கிறது. ஹோட்டல் பகுதி இருக்கும் தெரு முழுவதும் போராட்டக் காரர்களால் முடக்கப் பட்டு இருக்கிறது. அட்லாண்டா பகுதியில் அங்காங்கே போராட்டக்காரர்கள் குழுமி போராட்டங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேயர் இச்சம்பவத்தைக் குறித்து உயிருக்கு ஆபத்து நேரும் வகையில் காவல் துறையினர் நடந்து கொண்டதை ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்துள்ளார். ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஒரு போராட்டத் தீ இன்னும் முழுயைமான தீர்வு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து அடுத்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இச்சம்பத்திற்கு தற்போது பலரும் காட்டம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout