பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறந்த நாள் வாழ்த்து.. கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,November 12 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அருண், கேமரா முன் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 18 போட்டியாளர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது மேலும் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான அருண் தனது காதலியும் நடிகையும் கடந்த சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை நள்ளிரவு 12 மணிக்கு சரியாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பிறகு விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு கேமரா முன்வந்து அர்ச்சனாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘நான் இங்கே நலமாக உள்ளேன், இந்த வாரம் கேப்டன் ஆகவும் ஆகி உள்ளேன், உனது பிறந்தநாள் இன்று என எனக்கு தெரியும், உனக்கு எல்லாம் வெற்றியாக வாழ்த்துக்கள். ஏற்கனவே நான் சொன்னது போல் பிக் பாஸ் கோப்பையுடன் உன்னை விரைவில் சந்திக்கிறேன்; என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை அர்ச்சனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தனது நெகிழ்ச்சியுடன் ’என் பிறந்தநாள் முழுமை அடைந்து விட்டது, இதற்காக நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்தேன், இந்த அற்புத உணர்வை கொடுத்த அருணுக்கு எனது நன்றி’ என்று பதிவு செய்துள்ளார்.