'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பம்.. இந்த வார எலிமினேஷன் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்றும் மீதமுள்ள நான்கு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்றும் கூறப்பட்டது.
அந்த வகையில் ஏற்கனவே விசித்ரா முதன்முதலாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் அடுத்ததாக மைம் கோபி, ஷிவாங்கி ஆகியோர் தகுதி பெற்றனர். இதனை அடுத்து ஸ்ருஷ்டி மற்றும் கிரண் ஆகிய இருவரில் ஒருவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்றும் ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நான்காவது ஃபைனலிஸ்ட் ஆக ஸ்ருஷ்டி தகுதி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கிரண் தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவார் என்ற நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக அவரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக நடுவர் தாமு அறிவித்தார். இதையடுத்து தற்போது ஐந்து போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
அடுத்த வாரம் வைல்ட் கார்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் அதில் ஒருவர் ஆறாவது இறுதி போட்டியாளராக தகுதி பெறுவார் என்பதும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் 6 பேர்களில் ஒருவர் நான்காவது சீசன் டைட்டில் பட்டம் வெல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com