பிக்பாஸ் 2: முதல் நாளிலேயே நான்கு பேர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

  • IndiaGlitz, [Monday,June 18 2018]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று சுமார் 4 மணி நேரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினரான ஓவியாவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோவில் போட்டியாளர்களில் 4 பேர்களின் லக்கேஜ் அனுப்பி வைக்கப்படாது என்றும், அவர்கள் யார் என்பதையும் போட்டியாளர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் குரல் ஒலித்துள்ளது.

பிக்பாஸின் இந்த தகவல் போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லக்கேஜ் இல்லாமல் 100 நாட்கள் எப்படி சமாளிப்பது என்பதை நினைத்தாலே பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பெரும் கவலையாக இருக்கும்.

இந்த நிலையில் லக்கேஜுடன் உள்ளே சென்ற ஓவியா 'உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கு' என்று கூறுவது போட்டியாளர்களுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சல்மான்கானின் 'ரேஸ் 3' சென்னை ஓப்பனிங் வசூல் விபரம்

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் தினத்தில் சல்மான்கான் படம் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டும் அதேபோல் அவர் நடித்த 'ரேஸ் 3' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் மில்டனின் 'கோலி சோடா 2' ஓப்பனிங் வசூல் எப்படி?

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'கோலி சோடா 2' படத்திற்கு ஊடகங்களும், சமூக இணையதளங்களும் நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து கடந்த வாரயிறுதி நாட்களில் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

ரூ.10 கோடியை தாண்டியது 'காலா'வின் சென்னை வசூல்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் கடந்த 7ஆம் தேதி வெளிவந்த 'காலா' திரைப்படத்திற்கு பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒருசில கலவையான விமர்சனங்களும் கிடைத்தது.

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி கைது

நடிகர் மன்சூர் அலிகான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பசுமை வழிச்சாலை அமைப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

65வது தென்னிந்திய பிலிம்பேர் விருது பெற்றவர்களின் விபரங்கள்

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.