தல ரசிகர்களே! இந்த இரண்டையும் பெல்கிரேடுக்கு அனுப்புங்கள். விவேக் ஓபராய்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்து வரும் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவேக் ஓபராய் பெல்கிரேட் விமானப்படை தளத்தின் அருகில் இருந்து எடுத்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் 'தல ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஹலோ! இங்கு கடும் பனிப்பொழிவு இருக்கின்றது. எனவே தல ரசிகர்கள் கொஞ்சம் அன்பையும், சூரிய வெளிச்சத்தையும் அனுப்பி வையுங்கள்' என்று பதிவு செய்துள்ளார்.
A big hello to all #Thala fans! At the Belgrade Air Force base! It's freezing cold here,send us some love and sunshine 🙏😃#Vivegam pic.twitter.com/jIur8GTJDY
— Vivek Anand Oberoi (@vivek_oberoi) April 20, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments