தல ரசிகர்களே! இந்த இரண்டையும் பெல்கிரேடுக்கு அனுப்புங்கள். விவேக் ஓபராய்

  • IndiaGlitz, [Friday,April 21 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்து வரும் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவேக் ஓபராய் பெல்கிரேட் விமானப்படை தளத்தின் அருகில் இருந்து எடுத்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் 'தல ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஹலோ! இங்கு கடும் பனிப்பொழிவு இருக்கின்றது. எனவே தல ரசிகர்கள் கொஞ்சம் அன்பையும், சூரிய வெளிச்சத்தையும் அனுப்பி வையுங்கள்' என்று பதிவு செய்துள்ளார்.

More News

ஜெ.தீபா கணவரின் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு

எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டுக்கோப்பாக காப்பாற்றப்பட்ட அதிமுக தற்போது மூன்று அணிகளாக உள்ள நிலையில் அதிமுகவின் அடுத்த தலைவராக வருவார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய கட்சியை தொடங்கினார்...

தனுஷ்-மதுரை தம்பதியினர் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனுமான தனுஷை தங்கள் மகன் என்றும், சிறு வயதில் தங்களை விட்டு பிரிந்து சென்ற தனுஷை தங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்...

ஆரம்பமே அட்டகாசம்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜீவா நன்றி

'லொள்ளுசபா' ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு சற்று முன்னர் நடைபெற்றது...

அப்பல்லோவில் ஜெ-சசி பேசிய வீடியோவை வெளியிடுவேன். திவாகரன் மகன் மிரட்டல்

அதிமுக கட்சியையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக மூத்த அமைச்சர்கள் சமீபத்தில் முடிவெடுத்தனர்...