தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத பூகம்பம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை திடீரென மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் இது 7.4 என பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பூகம்பம் காரணமாக திவான் தீவு மற்றும் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தைவானில் உள்ள ஹுவாலியன் என்ற நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் சில கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் சாய்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் இதுதான் என தைவான் நாட்டின் புவியியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தைவான் நாட்டில் நிகழ்ந்த பூகம்பம் காரணமாக 3 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து வருவதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments