அப்ப சூர்யா ரோலக்ஸ் இல்லையா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 08 2022]

உலகநாயகன் கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியவர்களின் அபாரமான நடிப்பு, லோகேஷ் கனகராஜ் திரைக்கதை, அனிருத்தின் பின்னணி இசை ஆகியவை படத்தின் தூண்களாக உள்ளன. அதைவிட கடைசி ஐந்து நிமிடத்தில் வரும் சூர்யா ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம்பெற்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது நெட்டிசன்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். ரோலக்ஸ் என்ற கேரக்டரை நேரில் பார்த்த ஒரே ஒருவர் சந்தானம் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி மட்டுமே. அவரும் இந்த படத்தின் இறுதியில் கொல்லப்பட்டு விடுவதாக காண்பிக்கபடுவதால் உண்மையான ரோலக்ஸ் என்பவர் யார் என யாருக்கும் தெரியாது .

இந்த நிலையில் ரோலக்ஸ் கேரக்டரில் அறிமுகம் சூர்யா தான் உண்மையான ரோலக்ஸா? அல்லது விக்ரம் ஏஜண்ட் தான் சூர்யா ரோலக்ஸா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரோலக்ஸ் கேரக்டரை பார்த்து கமல் கடைசியில் சிரிக்கும் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பதால் ரோலக்ஸ் கேரக்டர் ஒரு புதிராக கூட இருக்கலாம்.

ஒருவேளை கமல் மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து உண்மையான ரோலக்ஸ் கேரக்டர் யார் என்பதை கண்டுபிடித்து அவரை வீழ்த்துவதே அடுத்த பாகத்தில் கதையாக இருக்கலாம். நாம் இப்படி யோசித்தாலும் லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து என்ன மாதிரியாக யோசித்து வைத்திருக்கின்றார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.